கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் 12 சதவிகிதம் பீர் விற்பனை சரிந்திருப்பதால், அதனை உயர்த்தும் முயற்சியில் டாஸ்மாக் ஈடுபட்டுள்ளது.
இந்த முயற்சியாகத்தான் டாஸ்மாக் கடைகளில் புதிதாக நான்கு வகையான பீர்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனால், பீர் வகைகளைத் தேர்வு செய்ய வாடிக்கையாளர்களுக்கு அதிக வாய்ப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறத.
இந்த வகையில், ஏற்கனவே, ஆந்திரத்தைச் சேர்ந்த பிளாக் பஸ்டர் என்ற பீர் வகை அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. விரைவில் மேலும் மூன்று பீர் வகைகளும் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதாவது பிளாக் ஃபோர்ட், கோதுமை பீரான வூட்பெக்கர் ஆகியவையும் விற்பனைக்கு வர விருக்கிறது. இவை இரண்டும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மதுபானத் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. அறிமுகமாகவிருக்கும் மூன்று பீர் வகைகளில் இவையும் அடங்கும்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் பீர் விற்பனை முதல் வாரத்தில் குறைந்திருக்கும் நிலையில், அதனை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதாவது கடந்த ஆண்டு 10.88 லட்சம் பீர் பெட்டகங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு வெறும் 7.97 லட்சம் பெட்டகங்கள்தான் விற்கப்பட்டுள்ளன.
வழக்கமாக மார்ச் முதல் ஜூன் மாதம் வரை பீர் விற்பனை அனல்பறக்கும். ஆனால், எதிர்மறையாக இந்த ஆணடு பீர் விற்பனை மந்தமாகியிருக்கிறது. எனவே, புதிய பீர் வகையை அறிமுகப்படுத்தியிருப்பதாகவும், அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் தேவையான பீர் வகைகள் கையிருப்பில் வைக்குமாறு தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.