ENS
தமிழ்நாடு

பொன்முடிக்கு எதிராக ஏப். 16-ல் அதிமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்!

பெண்கள் பற்றி ஆபாசமாகப் பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிராக சென்னையில் ஏப்ரல் 16 ஆம் தேதி அதிமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

DIN

பெண்கள் பற்றி ஆபாசமாகப் பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிராக சென்னையில் ஏப்ரல் 16 ஆம் தேதி அதிமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களை இழிவுபடுத்திப் பேசிய அமைச்சர் பொன்முடியைக் கண்டித்து சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே அதிமுக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் பொன்முடி, விலைமாது எனக் குறிப்பிட்டு பெண்கள் பற்றி கொச்சையான கருத்துகளைக் கூறியிருந்தார்.

பொதுக்கூட்ட மேடையில் பொன்முடி பேசிய காணொலி வைரலான நிலையில், சமூக ஊடகங்களில் கடும் கண்டனம் எழுந்தது. திமுக எம்.பி. கனிமொழி உள்பட பலரும் அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி விடுவிக்கப்படுவதாக கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். எனினும் அமைச்சர் பதவியில் தொடர்கிறார்.

எனினும் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில் அதிமுக போராட்டத்தை அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் தனுஷுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி?

இந்தியாவில் 9 பிரிட்டன் பல்கலைக்கழக வளாகங்கள் அமைக்கத் திட்டம்: பிரதமர் மோடி

பிகார் தேர்தல் பணிகளில் 8.5 லட்சம் அதிகாரிகள்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஹங்கேரிய எழுத்தாளருக்கு அறிவிப்பு!

மாலத்தீவில்... ஆமிரா தஸ்தூர்!

SCROLL FOR NEXT