அண்ணாமலை-நயினார் நாகேந்திரன்.  
தமிழ்நாடு

தமிழக மக்களின் உரிமைக்காக எனது குரல் என்றும் ஒலிக்கும்: கே. அண்ணாமலை

தமிழக மக்களின் உரிமைக்காக எனது குரல் என்றும் ஒலிக்கும் என்று பாஜவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

DIN

தமிழக மக்களின் உரிமைக்காக எனது குரல் என்றும் ஒலிக்கும் என்று பாஜவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், என் அன்பு சகோதர சகோதரிகளே, உங்கள் அனைவரின் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி.

தமிழக மக்களின் உரிமைக்காக எனது குரல் என்றும் ஒலிக்கும்!

வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தாமரை சொந்தங்கள் அனைவரும், நயினார் நாகேந்திரன் தலைமைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, திமுகவை வீழ்த்துவது என்ற ஒற்றை இலக்கை நோக்கி ஒருங்கிணைந்து பயணிப்போம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலணி அணியாத அண்ணாமலையின் சபதம் முறிந்ததா?

தமிழகத்தில் பாஜக தலைவராக கடந்த 2021ஆம் ஆண்டு அண்ணாமலை பொறுப்பேற்றார். அது முதல் பாஜகவின் வளர்ச்சிக்காக பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவந்தார்.

இந்தநிலையில் மாநிலம் தலைவருக்கான தேர்தல் அண்மையில் அறிவிக்கப்பட்டு, நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனுவை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.

அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், சனிக்கிழமை மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதேசமயம் முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் அக்கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவின் கோபுரத்தில் கலசம் வைத்தவர் அண்ணாமலை- நயினார் நாகேந்திரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT