அண்ணாமலை  கோப்புப் படம்
தமிழ்நாடு

காலணி அணிந்தது குறித்து அண்ணாமலை விளக்கம்

நயினார் நாகேந்திரனின் அன்பு அறிவுறுத்தலை ஏற்று காலணி அணியத் தொடங்கியிருக்கிறேன் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துளளார்.

DIN

நயினார் நாகேந்திரனின் அன்பு அறிவுறுத்தலை ஏற்று காலணி அணியத் தொடங்கியிருக்கிறேன் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துளளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும், மக்கள் விரோத திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்ற உறுதியோடு, கடந்த சுமார் நான்கு மாதங்களாக, நான் உட்பட தமிழக பாஜக சகோதர சகோதரிகள் பலரும், காலணி அணியாமல் விரதத்தை மேற்கொண்டு வருகிறோம்.

நேற்றைய தினம், தமிழக பாஜக மாநிலத் தலைவர், நயினாரின் அன்பு அறிவுறுத்தலை ஏற்று, தமிழகத்தில், வரும் சட்டமன்றத் தேர்தலில், நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி, திமுக ஆட்சியை நிச்சயம் அகற்றும் என்ற உறுதியுடன், காலணி அணியத் தொடங்கியிருக்கிறேன்.

எடப்பாடி பழனிசாமி எது செய்தாலும் வெற்றிதான்: செல்லூர் கே.ராஜு

என்னுடன் விரதம் மேற்கொண்டு வந்த தமிழக பாஜக சகோதர சகோதரிகள், வரும் நாட்களில், தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கல்லையும் முள்ளையும் கடந்து பயணப்பட்டு, தங்கள் கடின உழைப்பை வழங்க வேண்டிய தேவை இருக்கிறது. ஆகவே, நயினாரின் அன்பு அறிவுறுத்தலை ஏற்று, அனைவரும் தங்கள் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என்று, உங்கள் அன்பு சகோதரனாகக் கேட்டுக் கொள்கிறேன்.

வாழ்க தமிழ். வளர்க பாரதம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

50% குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை சுக்குநூறாக்கிய கால்பந்து வீரர்!

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

SCROLL FOR NEXT