பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் யார் என்பது குறித்து அக்கட்சியில் குழப்பம் நிலவி வரும் சூழலில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
பாமகவின் தலைவராக இனி நான் செயல்படுவேன் என்றும் 2026 பேரவைத் தோ்தலில் பாமகவின் வெற்றிக்காக செயல் திட்டங்களை வகுத்துள்ளேன் என்றும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் முன்னதாக அறிவித்திருந்தார்.
பாமக கட்சித் தலைவர் பதவி சர்ச்சை நீடித்துவரும் நிலையில் அன்புமணி ராமதாஸ் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பாமக தலைவா் பதவி குறித்து எதிர்பாராத குழப்பங்கள் நிலவி வருகின்றன.
கட்சியின் தலைவராக நான் முறைப்படி பொதுக்குழு உறுப்பினா்களால் தோ்ந்தெடுக்கப்பட்டு, அதை தோ்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கும் நிலையில், பாமக தலைவராக நான் தொடா்ந்து செயல்படுவேன்” என அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டார்.
இந்நிலையில், இது தொடர்பாக தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான ஜி.கே. மணி உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தைலாபுரம் தோட்டத்தில் பொதுக்குழுவைக் கூட்ட ராமதாஸ் முடிவு எடுத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: காலணி அணிந்தது குறித்து அண்ணாமலை விளக்கம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.