அதிக வெப்பத்திலிருந்து பாதுகாக்க குழந்தையை துணியால் மூடி அழைத்துச் செல்லும் காட்சி   PTI
தமிழ்நாடு

ஏப். 18 வரை வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்கும்!

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

DIN

தமிழகத்தில் ஏப். 18 வரை வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை(ஏப்.14) வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், தமிழகத்தில் ஒருசில இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஏப்.15) முதல் வெள்ளிக்கிழமை(ஏப். 18) வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை(ஏப். 14) காலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 38.6 டிகிரி செல்சியஸ் திருத்தணியில் பதிவாகியுள்ளது. அதற்கடுத்தபடியாக, மதுரை விமான நிலையத்தில் 38.5 டிகிரி செல்சியஸ், ஈரோடு 38.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஏப்.15) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், அதிகபட்ச வெப்பநிலை 37 - 38 டிகிரி செல்சியஸை ஒட்டி நிலவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி நிலவும்.

தமிழகத்தில் ஒருசில இடங்களில், புதுவை, காரைக்காலிலும் செவ்வாய்க்கிழமை (ஏப்.15) இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது.

கேரளத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்.15) அதிகபட்ச வெப்பநிலை உயருமென்பதால் மக்களுக்கு வெப்பத்தால் அசௌகரியம் உண்டாகக்கூடும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆகவே, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெரூசலேமில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு! 5 பேர் பலி!

பாஜகவிலிருந்து விலகிய புதுச்சேரி முன்னாள் தலைவர்!

ஜிஎஸ்டி குறைப்பு: ராயல் என்ஃபீல்டு பைக்குகள் விலையில் மாற்றம்!

ஓடிடியில் கவனம் பெறும் பன் பட்டர் ஜாம்!

தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT