கோவை குற்றாலம் 
தமிழ்நாடு

கோடை விடுமுறை:  கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

கோடை விடுமுறையையொட்டி,  கோவை குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர.

DIN

கோவை: கோடை விடுமுறை மற்றும் வெய்யிலின் தாக்கம் அதிகளவில் இருப்பதால் விடுமுறையை கழிப்பதற்காக மக்கள் குடும்பத்துடன்  கோவை குற்றாலத்தை நோக்கி படையெடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் சாடிவயல் அருகே உள்ள கோவை  குற்றாலத்தில் கோடை விடுமுறை மற்றும் வெய்யிலின் தாக்கம் அதிகளவில் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சியில் தண்ணீர் வரத்தும் இருந்ததால் சுற்றுலாப் பயணிகள் நீர்வீழ்ச்சியில் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்தனர்.

சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பிற்காக வனத்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் சென்று வர கூடுதல் வாகனங்கள் இயக்கப்பட்டது.

நீர்வீழ்ச்சியிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனர். மேலும் பள்ளி, கல்லூரி விடுமுறை என்பதால் மக்கள் குழந்தைகளுடன் குதூகலமாக குளிக்க வந்தனர்.

புதுப்பொலிவுடன் கோவை குற்றாலம்

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை குற்றாலத்தில் சீரமைப்புப் பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட பயணச் சீட்டுகள் பெற்றுக் கொண்டு பொதுமக்கள் குளிக்கச் சென்றனர்.

மேலும், கோவை வெள்ளியங்கிரி மலைக்கு சாமி கும்பிட வந்தவர்கள் அங்குச் சென்றுவிட்டு, நேராக கோவை குற்றாலம் வந்து குளித்து செல்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூரணச்சந்திரனின் தற்கொலைக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்! - Nainar Nagendran

சாலை வலம், பொதுக் கூட்டம்: வழிகாட்டு நெறிமுறைகள் ஜன. 5-க்குள் வெளியிட உத்தரவு!

லியோ சாதனையை முறியடித்த ஜன நாயகன்!

2025: ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் முதல் கரூர் வரை... நெஞ்சை உலுக்கிய நெரிசல் பலிகள்!

ஆஷஸ் தொடர்: சாதனைப் பட்டியலில் இணைந்த அலெக்ஸ் கேரி!

SCROLL FOR NEXT