சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பு: கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல்!
தொடர் விடுமுறையால் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசல்.
தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு மகாவீர் ஜெயந்தி, சனி, ஞாயிறு வார விடுமுறை, சித்திரை முதல் தேதியான தமிழ் புத்தாண்டு விடுமுறை என தொடர்ந்து அரசு விடுமுறை தினங்களால் சுற்றுலாப் பயணிகள் வருகை கடந்த நான்கு நாட்களாக அதிகரித்து காணப்பட்டது.
12 மைல் சுற்றுச்சாலையில் உள்ள சுற்றுலாத் தலங்களை காண அதிக வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் சென்றதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் நீண்டவரிசையில் வாகனங்கள் காத்திருந்தன.
Advertisement
Advertisement
ஏரிச்சாலையைச் சுற்றி வாகனங்கள் அதிகம் நிறுத்தப்பட்டிருந்தன. கடும் போக்குவரத்து நெரிசலால் ஒருநாள் சுற்றுலா வந்தவர்கள் முழுமையாக கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றிப்பார்க்க முடியாதநிலை ஏற்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.