பாசார் கிராமத்தில் உள்ள சித்தேரியில் குளிக்கச் சென்ற இரு மாணவிகள் தண்ணீரில் மூழ்கி திங்கள்கிழமை (ஏப். 14) உயிரிழந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டத்துக்குட்பட்ட பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகள் ஸ்வேதா (12). இவர் இதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே போல சிவக்குமார் என்பவர் மகள் சிவசக்தி (11). இவர் அதே பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
ஸ்வேதா அவரது பாட்டி அய்யம்மாள் வீட்டில் தங்கி பயின்று வந்தார். சிவசக்தியும் அவரது பாட்டி செல்வி வீட்டில் தங்கி பயின்று வந்தார். திங்கள்கிழமை தமிழ் வருடப் பிறப்பு என்பதால் பள்ளி விடுமுறை நாள் ஆகும். அதனால் சக தோழிகளுடன் திங்கள்கிழமை பிற்பகல் ஏரிக்கு குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது தண்ணீர் மூழ்கி விட்டனர். இவருடன் சென்ற தோழிகள் கூச்சலிடவே அருகிலிருந்தவர்கள் தண்ணீரில் மூழ்கி தூக்கியபோது இருவரும் உயிரிழந்து தெரியவந்தது.
தவலறிந்த ரிஷிவந்தியம் போலீசார் நிகழ்விடத்திற்குச் சென்று உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.