எடப்பாடி கே. பழனிசாமி கோப்புப் படம்
தமிழ்நாடு

பாஜகவுடன் கூட்டணி: மே 2-ல் கூடுகிறது அதிமுக செயற்குழு!

அதிமுக செயற்குழு கூட்டம் தொடர்பாக...

DIN

வரும் மே 2 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

அதிமுக செயற்குழு கூட்டம் வரும் மே 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், அவைத் தலைவர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும்.

அதிமுக செயற்குழு உறுப்பினர்களான, தலைமைச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், பிற மாநிலச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.

உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மாநில உரிமைகள் மீட்டெடுக்க உயர்நிலைக் குழு: முதல்வர் அறிவிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

SCROLL FOR NEXT