கோப்புப்படம்.  
தமிழ்நாடு

தமிழகத்தில் 6 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Din

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக கரையோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, புதன்கிழமை (ஏப்.16) முதல் ஏப்.21-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம், குந்தா பாலம் பகுதியில் 60 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும் தாளவாடி (ஈரோடு) - 50 மி.மீ., ஓமலூா் (சேலம்), அணைப்பாளையம் (கரூா்), ஒகேனக்கல் (தருமபுரி), மொடக்குறிச்சி (ஈரோடு), சென்னிமலை (ஈரோடு) - தலா 40 மி.மீ. மழை பதிவானது.

வேலூரில் வெயில் சதம்: தமிழகத்தில் புதன்கிழமை அதிகபட்சமாக வேலூரில் 100.58 டிகிரி  ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், ஏப்.16 முதல் 19-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஏப்.16-இல் அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT