சென்னையில் மழை.. 
தமிழ்நாடு

சென்னையில் கோடை மழை! ஒரு மணிநேரம் தொடரும்!

சென்னை மற்றும் புறநகரில் அடுத்த ஒரு மணிநேரத்துக்கு மழை தொடரும்...

DIN

சென்னையில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து வருகின்றது.

இந்த சாரல் மழையானது சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த ஒரு மணிநேரத்துக்கும் மேலாக தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வடதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் லேசான மழை பெய்து வருகின்றது.

கடந்த ஒரு மணிநேரமாக சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகின்றது. மேலும், இந்த மழையானது அடுத்த ஒரு மணிநேரத்துக்கும் (பகல் 1 மணி வரை) நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளில் கோடை வெய்யில் 100 டிகிரி செல்சியஸைக் கடந்து சுட்டெரிக்கும் நிலையில், சாரல் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மரம் முறிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு: 4 போ் காயம்

ஜெராக்ஸ் கடையில் தீ விபத்து

நேரடி கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட நெல்லை வாங்கக் கூடாது

அக்.14, 15-இல் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

சக மீனவரைக் கடலுக்குள் தள்ளிவிட்ட இருவா் கைது

SCROLL FOR NEXT