மு.க. ஸ்டாலின்  
தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ஐந்து முக்கிய அறிவிப்புகள்!

திருவள்ளூரில் இன்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ஐந்து முக்கிய அறிவிப்புகள்

DIN

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின், முக்கிய அறிவிப்புகள் ஐந்தினை வெளியிட்டார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, ஆண்டார்குப்பத்தில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது பேசுகையில், திருவள்ளூர் வந்த பிறகு உங்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யாமல் போகமுடியுமா? அதனால் புதிதாக 5 அறிவிப்புகளை நான் இந்த விழாவில் வெளிடப் போகிறேன்.

முதல் அறிவிப்பு

கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், தண்டலம் - கசவநல்லாத்தூர் சாலையில், கூவம் ஆற்றின் குறுக்கே 20 கோடியே 37 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலம் அமைக்கப்படும்.

இரண்டாவது அறிவிப்பு

திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம், மணவூர் – இலட்சுமி விலாசபுரம் சாலையில், கொசஸ்தலையாறு ஆற்றின் குறுக்கே, 23 கோடியே 47 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்.

மூன்றாவது அறிவிப்பு

திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், காக்களூர் ஊராட்சியில், தாமரைக்குளம் மேம்படுத்தும் பணிகள், காக்களூர் ஏரி மேம்படுத்தும் பணிகள் 2 கோடியே 27 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் “நமக்கு நாமே” திட்டத்தின் கீழ் அது மேற்கொள்ளப்படும்.

நான்காவது அறிவிப்பு

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய உப்புத்தர நில ஏரியான பழவேற்காடு ஏரி, பறவைகளுக்கான முக்கிய வாழ்விடமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த ஏரிப் பகுதியில், சூழலியல் சுற்றுலா வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும், இங்கே இருக்கின்ற வைரவன்குப்பம் மீனவ கிராமத்தில், மீனவர்களின் பயன்பாட்டுக்காக வலை பின்னும் கூடம் அமைத்துத் தரப்படும்.

இறுதியாக, மிக முக்கியமான ஐந்தாவது அறிவிப்பு

வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கின்ற திருமழிசை - ஊத்துக்கோட்டை சாலையில், 51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும் என ஐந்து அறிவிப்புகளை வெளியிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT