ENS
தமிழ்நாடு

ஏப். 23-ல் அதிமுக எம்எல்ஏக்களுக்கு இபிஎஸ் விருந்து!

ஏப். 23 ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விருந்தளிக்க உள்ளதாகத் தகவல்.

DIN

சென்னையில் ஏப். 23 ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விருந்தளிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது. பாஜகவுடன் இனி கூட்டணியே கிடையாது என்று கூறிய இபிஎஸ் தற்போது தேர்தலுக்காக கூட்டணி வைத்துள்ளார்.

சமீபத்தில் தமிழகம் வந்த அமித் ஷா, கூட்டணி குறித்து இறுதிக்கட்ட பேச்சுவார்தையையும் முடித்து கூட்டணி அறிவிப்பையும் வெளியிட்ட பின்னரே தில்லி சென்றார்.

இதையடுத்து தேர்தல் பணிகளில் அதிமுக - பாஜக கூட்டணி இறங்கியுள்ளது.

அதன் ஒருபகுதியாக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக எம்எல்ஏக்களுக்கு விருந்தளிக்க உள்ளார்.

சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் வருகிற ஏப். 23 ஆம் தேதி தடபுடலாக விருந்து வைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலுக்காக எம்எல்ஏக்கள் தீவிரமாக பணியாற்றவும் அந்த தொகுதிகளில் வெற்றி பெற வியூகங்களை சிறப்பாக வகுக்கவும் ஊக்குவிக்கும் பொருட்டு இந்த விருந்து அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் கூட்டணி உறுதியான மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாகவும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தவும் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளார்.

தொடர்ந்து வருகிற மே 2 ஆம் தேதி அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT