மரடோனா. 
தமிழ்நாடு

தூத்துக்குடியில் கப்பல் மாலுமி வெட்டிக்கொலை!

கப்பல் மாலுமி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக...

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கப்பல் மாலுமி மர்ம நபர்களால் சனிக்கிழமை இரவு வெட்டப்பட்ட நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை பலியானார்.

தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த சகாயகுமார் மகன் மரடோனா(30). கப்பல் மாலுமியான இவருக்கும், திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் பைக்கில் சென்றவருக்கும் சனிக்கிழமை இரவு தகராறு ஏற்பட்டதாம்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் தன்னுடன் சிலரை அழைத்து வந்து, மரடோனாவை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த மரடோனாவை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால், வழியிலேயே அவர் பலியானார். இது குறித்து வடபாகம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். பலியான மாலுமிக்கு மனைவி மற்றும் 5 வயதில் பெண்குழந்தை உள்ளது.

இதையும் படிக்க: ஈஸ்டர் திருநாள்: கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

சாலையை சீரமைக்க கோரிக்கை

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பண மோசடி: இளைஞா் தற்கொலை

SCROLL FOR NEXT