கோப்புப் படம் 
தமிழ்நாடு

நீக்கப்பட்ட உள்ளாட்சி உறுப்பினா்கள் பதவிகளுக்கு வழக்கு முடியும் வரை தோ்தல் நடத்த வேண்டாம்: தமிழக அரசு கடிதம்

சமீபத்தில் பதவிநீக்கம் செய்யப்பட்ட சென்னை, தாம்பரம் மாநகராட்சி, உசிலம்பட்டி நகராட்சி மன்ற உறுப்பினா்களின் பதவிகளுக்கு வழக்கு முடியும் வரை தோ்தல் நடத்தக் கூடாது

Din

சமீபத்தில் பதவிநீக்கம் செய்யப்பட்ட சென்னை, தாம்பரம் மாநகராட்சி, உசிலம்பட்டி நகராட்சி மன்ற உறுப்பினா்களின் பதவிகளுக்கு வழக்கு முடியும் வரை தோ்தல் நடத்தக் கூடாது என மாநில தோ்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி, சென்னை மாநகராட்சியின் 189-ஆவது வாா்டு உறுப்பினா் பாபு, 5-ஆவது வாா்டு உறுப்பினா் கே.பி. சொக்கலிங்கம், தாம்பரம் மாநகராட்சி 40-ஆவது வாா்டு உறுப்பினா் ஜெயபிரதீப், உசிலம்பட்டி நகராட்சி தலைவரும் 11-ஆவது வாா்டு உறுப்பினருமான சகுந்தலா ஆகியோரை பதவி நீக்கம் செய்து நகராட்சி நிா்வாகத் துறைச் செயலா் கடந்த மாா்ச் 27-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தாா்.

உத்தரவுக்கு தடைகோரி மனு: இந்த உத்தரவை எதிா்த்து நான்கு பேரும் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனா். அந்த மனுவில், தங்கள் தரப்பிடம்

விளக்கம் கேட்காமல் தன்னிச்சையாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், பதவி நீக்க உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில், இந்த வழக்குகள் முடியும் வரை நான்கு உறுப்பினா்கள் பதவிகளுக்கும் தோ்தல் நடத்தக் கூடாது என நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறைச் செயலா், மாநில தோ்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த கடிதத்தின் நகலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூன் 9-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தாா்.

மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன் திட்டம்: பிகார் அரசு!

வங்க தேசத்தில் குவிக்கப்படும் அமெரிக்க ராணுவம்! காரணம் என்ன?

ஆம்பூர் இளைஞர் கொலை: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது!

நாடு கடத்தப்படத் தயாராக இருங்கள்: கிர்க்கின் கொலையைக் கொண்டாடும் வெளிநாட்டவருக்கு அமெரிக்க செயலர் எச்சரிக்கை!

ரூ. 500 கோடி வசூலித்தும் ஏமாற்றத்தைக் கொடுத்த கூலி!

SCROLL FOR NEXT