முதல்வர் ஸ்டாலின்.  
தமிழ்நாடு

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

DIN

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவை திங்கள்கிழமை கூடியதும் விதி எண் 110இன் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

• அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

• அரசு ஊழியர்களுககு பண்டிகை கால முன்பணம் ரூ.10,000இல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்படும்.

• பொங்கல் போனஸ் சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியம் ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

• மகப்பேறு விடுப்பு காலங்கள் பதவி உயர்வுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

• பழைய ஓய்வுதியம் திட்டம் தொடர்பாக ஆராயும் குழு செப்டம்பர் மாதம் அறிக்கை சமர்ப்பிக்கும்.

அரசு ஊழியர்களின் பிள்ளைகள் கல்வி முன்பணம் கலை, அறிவியல் கல்லூரி பயில ரூ.50,000ஆக உயர்த்தி வழங்கப்படும்.

அரசு ஊழியர்களின் பிள்ளைகள் கல்வி முன்பணம் தொழிற்கல்விக்கு ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும்.

ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகைக்கால முன்பணம் ரூ.4,000ல் இருந்து ரூ.6,000ஆக உயர்த்தி வழங்கப்படும்

அரசு அலுவலர்கள் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பலன் பெறும் நடைமுறை அக்டோபரிலேயே அமல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT