முதல்வர் ஸ்டாலின்.  
தமிழ்நாடு

தேசிய அளவில் சிறந்த படைப்புகளுக்கு செம்மொழி இலக்கிய விருது: முதல்வர் ஸ்டாலின்

தேசிய அளவில் சிறந்த படைப்புகளுக்கு இனி ஆண்டுதோறும் செம்மொழி இலக்கிய விருது வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

தேசிய அளவில் சிறந்த படைப்புகளுக்கு இனி ஆண்டுதோறும் செம்மொழி இலக்கிய விருது வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, கலைவாணர் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா - 2026 நிறைவு விழாவில் அவர் பேசுகையில், சில நாட்களுக்கு முன்பு, மனதுக்கு நெருடலாக ஒரு செய்தி தலைநகர் தில்லியில் இருந்து வந்தது. உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும்.

2025-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதுகள் இறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்பட இருந்த நிலையில், ஒன்றிய அரசின் கலாச்சாரத் துறை தலையீட்டால், விருது அறிவிக்கும் நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டிருக்கிறது. இனி, அது நடக்குமா? என்றும் தெரியவில்லை. கலை இலக்கிய விருதுகளில் கூட அரசியல் குறுக்கீடுகள் செய்வது ஆபத்தானது.

இப்படி ஒரு சூழலில், தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமான, உரிய எதிர்வினையை ஆற்றவேண்டும் என்று, பல்வேறு எழுத்தாளர்களும், கலை இலக்கிய அமைப்புகளைச் சார்ந்தோரும் என்னிடம் கோரிக்கை விடுத்திருந்தார்கள். இது, காலத்தின் தேவை என்று நாங்களும் உணர்ந்தே இருக்கிறோம்.

அதன்படி, உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கின்ற ஒரு அறிவிப்பை இந்த மேடையில் வெளியிட விரும்புகிறேன். “குறிப்பிட்ட இந்திய மொழிகளில் வெளியாகின்ற, தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், ஆண்டுதோறும் தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும்”. இதனை அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

முதல்கட்டமாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராட்டிய மொழிகளில் வெளியாகின்ற தலைசிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் செம்மொழி இலக்கிய விருது என்ற பெயரில் அந்த விருது வழங்கப்படும்.

விருதுடன், தலா 5 இலட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்படும். படைப்புகளின் இலக்கிய தரத்தையும், வெளிப்படையான தேர்வு முறையையும் உறுதி செய்யும் விதமாக புகழ்பெற்ற எழுத்தாளர்கள், விருதாளர்கள் அடங்கிய குழு ஒவ்வொரு மொழிக்கும் தனியே அமைக்கப்படும். புரவலர் பணியை தமிழ்நாடு அரசு மனநிறைவோடு மேற்கொள்ளும். அடுத்து அமையப்போவதும் திராவிட மாடல் 2.0 ஆட்சிதான்!

அப்போது, இதைவிட பெரிய அளவில், உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இந்த பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவை நடத்துவோம்! தமிழ்நாடு முழுவதும் மேலும் பல பிரமாண்ட நூலகங்களை அறிவுக் கோயில்களாக எழுப்புவோம்! அறிவுத்தீ வளர்ப்போம்! வெல்வோம் ஒன்றாக! இவ்வாறு குறிப்பிட்டார்.

CM Stalin has announced that the Semmozhi Literary Award will now be given annually for the best works at the national level.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் கஞ்சாவால் திணறும் தமிழகம்! நயினார் நாகேந்திரன்

பொங்கல் முடிந்து சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் கூட்டம்!

பாலக்காட்டில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து: பயணிகள் ரயில்கள் தாமதம்

கடைசி ஒருநாள்: இருவர் சதம் விளாசல்; இந்தியாவுக்கு 338 ரன்கள் இலக்கு!

மேலும் 5 புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை: பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்!

SCROLL FOR NEXT