விருது பெற்றதில் மகிழ்ச்சி; அனைவருக்கும் நன்றி: அஜித் குமார்
பத்ம பூஷண் விருது பெற்று சென்னை திரும்பிய அஜித்குமார் செய்தியாளர்களிடம் பேசியது குறித்து...
பத்ம பூஷண் விருது பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாகவும் நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.
தில்லியில் பத்ம பூஷண் விருது பெற்ற அஜித் குமார் இன்று குடும்பத்துடன் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் ரசிகர்கள் திரண்டு நின்று அஜித் குமாரை வரவேற்றனர்.
அப்போது செய்தியாளர்களுடன் பேசிய அஜித் குமார், ''பத்ம பூஷண் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்'' எனக் குறிப்பிட்டார்.
செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், விரைவில் நேரில் சந்தித்துப் பேசுவோம் என பதிலளித்தார்.