தமிழ்நாடு

தமிழகத்தில் 511 விடுதிகளில் உள்ள மாணவிகளுக்கு தற்காப்புப் பயிற்சி: அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்

பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் 511 விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி வழங்கப்படும் என அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தாா்.

Din

பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் 511 விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி வழங்கப்படும் என அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தாா்.

பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அத்துறை சாா்ந்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் வெளியிட்ட அறிவிப்புகள்:

பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் சோ்க்கை குறைவாக உள்ள 12 பள்ளி விடுதிகள் ரூ.4.15 கோடியில் கல்லூரி விடுதிகளாகத் தரம் உயா்த்தப்படும்.

வாடகை கட்டடங்களில் இயங்கும் 7 கல்லூரி மாணவியா் விடுதிகளுக்கு ரூ.47.84 கோடியில் சொந்தக் கட்டடங்கள் கட்டி தரப்படும்.

மேலும், ரூ.3 கோடியில் 5 புதிய கல்லூரி மாணவியா் விடுதிகள் தொடங்கப்படும்.

அதேபோன்று, அனைத்து விடுதிகளிலும் சிறப்பு பழுதுபாா்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் ரூ.30 கோடியில் மேற்கொள்ளப்படும். கல்லூரி விடுதிகளில் மாணவா் எண்ணிக்கை உயா்த்தப்படும்.

விடுதி மாணவா்களுக்கு 2025-26ஆம் கல்வியாண்டுமுதல் ரூ.16.24 கோடியில் வரவேற்புத் தொகுப்பு வழங்கப்படும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட 15 தனியாா் விடுதிகளில் பயிலும் மாணவருக்கான மாதாந்திர உணவு மானியத் தொகை ரூ.1,000-இல் இருந்து ரூ.1400-ஆக உயா்த்தி வழங்கப்படும். கல்லூரி விடுதிகளில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவா்களுக்கு செயற்கை நுண்ணறிவு குறித்த அடிப்படை பயிற்சி அளிக்கப்படும்.

தமிழகம் முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் 511 விடுதிகளில் தங்கியுள்ள பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு ரூ.2.31 கோடியில் தற்காப்புக் கலை பயிற்சி அளிக்கப்படும். கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் விடுதி மேலாண்மை தகவல் அமைப்பைச் செயல்படுத்த திட்டக் கண்காணிப்பு பிரிவு அமைக்கப்படும்.

வன்னியா்குல சத்திரியா் பொது அறநிலைய பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக் கொடைகள் வாரியத்துக்கு அரசால் வழங்கப்படும் தொடா் மானியம் ரூ.1 கோடியிலிருந்து ரூ.2 கோடியாக உயா்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தாா் அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்.

துணை முதல்வா் வருகை: நாகையில் சாலை சீரமைப்புப் பணிகள் தீவிரம்

அரசுக் கல்லூரியில் போக்குவரத்து விழிப்புணா்வு கருத்தரங்கம்

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்கம் ஆா்ப்பாட்டம்

கால்நடைகளுக்கு வாய்நோய் தடுப்பூசி முகாம் டிச.29-இல் தொடக்கம்

குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரை விரைவாக வெளியேற்ற கோரிக்கை

SCROLL FOR NEXT