கோப்புப்படம் 
தமிழ்நாடு

தமிழக செய்தித்துறையில் வேலைவாய்ப்பு! ஆக. 18 வரை விண்ணப்பிக்கலாம்!

தமிழக செய்தித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பம்.

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின்கீழ் இயங்கும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின்கீழ் இயங்கும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககத்தில் நிலை 1, ரூ.15,700-50000 (முந்தைய சம்பள ஏற்ற முறை ரூ.4800-ரூ.10,000 + தர ஊதியம் ரூ.1300) எனும் சம்பளத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளருக்கான அனைத்துப் படிகளுடன் கூடிய அலுவலக உதவியாளர் பணியிடம் ஒன்றும்;

நிலை – 15, ரூ.36200 – 114800 (முந்தைய சம்பள ஏற்ற முறை ரூ.9300-34800 + தர ஊதியம் ரூ.4500) எனும் சம்பளத்திலமைந்த தொகுப்பாளர் பணியிடம் ஒன்றும் நிரப்பப்படவுள்ளன.

அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு ஆதிதிராவிடர் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர்) (SCA-Priority) எனும் இனச் சுழற்சி முறையிலும், தொகுப்பாளர் பணியிடத்திற்கு ‘ஆதிதிராவிடர் முன்னுரிமைப் பெற்றவர்’ (Scheduled Caste - Priority) எனும் இனச் சுழற்சி முறையிலும் தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதிகபட்ச வயது வரம்பு 01.07.2025 அன்றுள்ளபடி 37. தமிழக அரசின் நடைமுறையிலுள்ள  விதிமுறைகளின்படி வயது வரம்பு தளர்வு செய்யப்படும்.

அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான கல்வித் தகுதி  எட்டாம் வகுப்பு தேர்ச்சி (VIII Std. Passed) தொகுப்பாளர் பணியிடத்திற்கான கல்வித் தகுதி தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் (தமிழில் எம்.ஏ.). அதிகபட்ச வயது வரம்பு 01.07.2025 அன்றுள்ளபடி 37.

தமிழக அரசின் நடைமுறையிலுள்ள  விதிமுறைகளின்படி வயது வரம்பு தளர்வு செய்யப்படும். விருப்பமும் தகுதியும் உடையவர்கள் வெள்ளைத்தாளில் கடவுச்சீட்டு அளவிலான ஒளிப்படத்தினை ஒட்டி தன்விவரக் குறிப்புடன் பெயர், முகவரி, பிறந்தநாள், மதம், இனம், கல்வித் தகுதி, முன்னுரிமை கோருவதற்கான சான்று ஆகியவற்றுடன் தேவையான சான்றிதழ்களின் ஒளிப்படிகளைத் தற்சான்றொப்பத்துடன் (Self Attested) இணைத்து 16.08.2025ஆம் நாள் மாலை 5.30 மணிக்குள் நேரிலோ, பதிவு அஞ்சலிலோ, “இயக்குநர் (முகூபொ), செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், நகர் நிருவாக அலுவலக வளாகம், முதல் தளம், எண்.75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி. நகர், சென்னை – 600 028" என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 044-29520509 என்னும் தொலைபேசி எண்ணில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Applications are invited from eligible candidates for the vacant posts in the Directorate of Ancient Tamil Etymology Database, which operates under the Department of Tamil Development and Information.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT