முதல்வர் ஸ்டாலின் (கோப்புப்படம்) படம்: பிடிஐ
தமிழ்நாடு

பாஜக கூட்டணியால் உண்மையான அதிமுக தொண்டர்கள் அதிருப்தி: முதல்வர் ஸ்டாலின்

பாஜக கூட்டணியால் உண்மையான அதிமுக தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

பாஜக கூட்டணியால் உண்மையான அதிமுக தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நான்காண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் நாள்தோறும் மாநில உரிமைகளுக்கான போராட்டம்தான். முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் நீட் தேர்வு, உதய் மின்திட்டம் , சொத்து வரி உள்ளிட்ட ஒன்றிய பா.ஜ.க. அரசின் வஞ்சகத் திட்டங்களுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததால், தமிழ்நாடு அதன் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.

தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்திடுவதற்காக நாடாளுமன்றத்தில் போர்க்குரல் எழுப்புவதோடு, உச்சநீதிமன்றத்திலும் சட்டப்போராட்டத்தை நடத்துகிறது திமுக அரசு. அதற்கான நெஞ்சுரத்தை நமக்குத் தந்திருப்பவர் ‘சுயமரியாதைக்காரர்‘ எனத் தன்னை அடையாளப்படுத்திய நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர்தான்.

பா.ஜ.க. ஆட்சி செய்யாத - ஆட்சிக்கே வர முடியாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அதிகாரப் பறிப்பு செய்யும் ஜனநாயகப் படுகொலை தொடர்ந்து வரும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு முன்னெடுத்த சட்டப்போராட்டத்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசே அதிகாரம் படைத்தது என்பது நிலைநாட்டப்பட்டு, தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்குமான ஜனநாயக நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

இந்தப் போராட்டங்களை இன்னும் வலிமையாகத் தொடர வேண்டியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் நலன் மீது கொஞ்சமும் அக்கறையில்லாத அ.தி.மு.க, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து தமிழர்களுக்கு மிகப் பெரும் துரோகத்தை இழைத்து வருகிறது.

உண்மையான அ.தி.மு.க தொண்டர்களே மனம் புழுங்குகிற வகையில், அடிப்படைக் கொள்கைகள் ஏதுமற்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி டெல்லி வரை சென்று மண்டியிட்டு பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார். சேராத இடந்தன்னில் சேர்ந்து தீராத பழி சுமந்தபடி ஊர் ஊராகப் பயணித்து, பொய்களைப் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Ruling DMK president and Tamil Nadu Chief Minister M K Stalin on Sunday hit out at his party's archrival, the AIADMK for renewing ties with the BJP, claiming 'true' workers of the party were not happy with the alliance.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வழிபாட்டுக்கு 500 விநாயகா் சிலைகள்

புதுவையில் திமுக மாடல் ஆட்சி அமையும்: தமிழக அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா நம்பிக்கை

பெங்களூா் நிறுவனத்துக்கு வோ் ஊக்கி மருந்து அளிக்க புதுவை வேளாண் விஞ்ஞானி முடிவு

ரெயின்போ நகா் புனித ஜான் மரி வியான்னி ஆலயத்தில் ஆண்டு விழா

வீட்டை இடித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொழிலாளி போராட்டம்

SCROLL FOR NEXT