தமிழ்நாடு

இரவில் சென்னை, 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும், சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தென்காசி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே, இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | எஸ்எஸ்சி தேர்வர்கள் போராட்டம்: தேர்வு நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்: சு. வெங்கடேசன் எம்.பி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் கல்லூரி மாணவா்களிடம் பேராசிரியா் பண மோசடி

திமுக ஆட்சியில் போராட்டக்களமாக மாறிய தமிழகம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

மனைவியை அடித்துக் கொன்ற கணவா் கைது

முத்தியால்பேட்டை மூலஸ்தம்மன் கோயிலில் ஆடித்திருவிழா

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

SCROLL FOR NEXT