கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கோவை குற்றால அருவியில் குளிக்க இன்று(ஆக. 5) தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 23 ஆம் தேதி வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டு இருந்த கோவை குற்றாலம், கடந்த ஜூலை மாதம் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கப்பட்டது.
கோவை குற்றாலம் சூழல் சுற்றுலாவிற்குச் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். வனத்துறையின் தனி வாகனங்களில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டு இதற்கான கட்டணம் வசூலிக்கப்பட்டது.
கோவை குற்றாலம், மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ளதால் வெளியூர் மற்றும் வெளி மாவட்டம், மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டுப் பயணிகளும் வந்து கோவை குற்றாலம் சூழல் சுற்றுலாவை மகிழ்ச்சியுடன் அனுபவித்துச் செல்கின்றனர்.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை அதிபலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டது.
இதனால், கோவை குற்றால அருவியில் குளிக்க இன்று(ஆக. 5) தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.