புது வாகனத்தில் கட்சிக் கொடி ஏற்றிய நயினார் நாகேந்திரன் Nainar Nagenthiran
தமிழ்நாடு

எம்ஜிஆர் பாணியில் நயினார் நாகேந்திரன் பிரசாரம்?

எம்ஜிஆர் பயன்படுத்திய காரின் பதிவெண்ணிலேயே நயினார் நாகேந்திரனுக்கும் பிரசார வாகனம் பிரத்யேகமாக வடிவமைப்பு

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் அடுத்தாண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பிரசாரப் போரில் ஈடுபட்டுள்ளன.

ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் திமுகவும், மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுகவும், தேமுதிக உள்ளம் தேடி இல்லம் நாடி என்று தேமுதிக உள்பட பாஜக, நாதக உள்ளிட்ட கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பிரசாரத்துக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனத்தை அரியலூர் முன்னாள் பாஜக தலைவர் ஐயப்பன் அளித்துள்ளார்.

வாகனத்தைப் பெற்றுக்கொண்ட நயினார் நாகேந்திரன், வாகனத்தில் கட்சிக் கொடியை ஏற்றியதுடன், அதனை தானே இயக்கி, நெல்லையில் முதல் பயணத்தை தொடங்கினார்.

இந்த வாகனத்தின் பதிவெண் 4777 என்பது மட்டுமின்றி, முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பயன்படுத்திய வாகனத்தின் பதிவெண்ணும் 4777 என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பி.இ. மாணவா் சோ்க்கை கலந்தாய்வு: இரு சுற்றுகளில் 92,423 பேருக்கு ஒதுக்கீடு: 3-ஆம் சுற்று இன்று நிறைவு

வீட்டுவசதி வாரிய வட்டி தள்ளுபடி: அடுத்த ஆண்டு மாா்ச் வரை நீட்டிப்பு

முதலமைச்சரின் தாயுமானவா் திட்டம்: வயது முதிா்ந்தோருக்கு ஆக.12 முதல் வீடு தேடி ரேஷன்

‘வரிகளின் அரசன்’ குற்றச்சாட்டு முதல் 50% வரி வரை... டிரம்ப் அறிவிப்புகள்!

5 ஆண்டுகளுக்கு 1,500 மெகாவாட் மின்சாரம்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின்வாரியம்

SCROLL FOR NEXT