உடுமலையில் ரூ.1,427 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின்.  
தமிழ்நாடு

2026 தேர்தலில் அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்துதான் தொடங்கும்: முதல்வர் ஸ்டாலின்

2026 தேர்தலில் அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்துதான் தொடங்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

2026 தேர்தலில் அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்துதான் தொடங்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் உடுமலையில் ரூ.1,427 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பின் அவர் பேசுகையில், இயற்கை எழில் கொஞ்சும் உடுமலைப்பேட்டையில் சிறப்பான நிகழ்ச்சி நடைபெறுகிறது. சர்க்கரையை அள்ளித் தரும் இனிப்பான ஊர் உடுமலைப்பேட்டை. திருப்பூரில் மட்டும் 133 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. சுமார் ரூ.10,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை திருப்பூர் மாவட்டத்திற்கு செய்திருக்கிறோம். அதிமுக ஆட்சியில் திருப்பூர் மாவட்டம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டது.

திருப்பூரில் 5 பாலங்களை கட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதி உத்தரவு பிறப்பித்தபோது அதிமுக ஆட்சியில் அதை முடக்கினர். தொடர்ந்து அடி மேல் அடி விழுவதால் விரக்தியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார் பழனிசாமி. விரக்தியில் தரம் தாழ்ந்து என்னை ஒருமையில் பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. தன்னை எம்ஜிஆர், ஜெயலலிதா என நினைத்துக்கொண்டு சவுண்டு விடுகிறார். சுந்தரா டிராவல்ஸ் பேருந்தை எடுத்துக் கொண்டு ஊர், ஊராக சென்று எடப்பாடி பழனிசாமி அவதூறு பரப்புகிறார்.

உடுமலைப்பேட்டை: 1 கி.மீ. நடந்து வந்து மக்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்

இந்த நல்லாட்சி என்றும் தொடரும். உங்கள் விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும். எந்த தைரியத்தில் மேற்கு மண்டலத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை தொடங்கினார் எனத் தெரியவில்லை. 2026 தேர்தலில் அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்துதான் தொடங்கும். அரசின் திட்டங்களை முடக்க உச்ச நீதிமன்றம் சென்ற அதிமுகவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சிவி.சண்முகம் ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீராறு, நல்லாறு, ஆனைமலையாறு என்ற கனவுத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். மாணவர்கள், இளைஞர்களுக்காக ரூ.9 கோடியில் நவீன நூலகம் அமைக்கப்படும். திருப்பூரில் ரூ.5 கோடியில் பன்னோக்கு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும். ஊத்துக்குளியில் வெண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை ரூ.6.5 கோடியில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், முத்துசாமி, கயல்விழி செல்வராஜ், சக்ரபாணி மற்றும் மாவட்ட ஆட்சியர் மனீஷ் நாரணவரே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Chief Minister Stalin has said that the AIADMK's defeat in the 2026 elections will start from the western region.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ரூ. 87 ஆயிரத்தைக் கடந்தது! 3 நாள்களில் ரூ. 2,000 உயர்வு!

முதியவா்களுக்கு எதிரான குற்றங்கள்: தமிழகம் 4-ஆவது இடம்!

பாடகர் ஸுபீன் கர்கின் மேலாளர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது!

வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு!

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 27 பேர் பலி!

SCROLL FOR NEXT