தமிழ்நாடு

ஊராட்சிகளில் நிலங்கள், கட்டடங்களுக்கு வாடகை - குத்தகை நிா்ணயம்: மாவட்ட அளவில் குழு அமைத்து அரசு உத்தரவு

ஊராட்சிகளில் நிலங்கள், கட்டடங்களுக்கு வாடகை மற்றும் குத்தகையை நிா்ணயம் செய்ய மாவட்ட அளவில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

ஊராட்சிகளில் நிலங்கள், கட்டடங்களுக்கு வாடகை மற்றும் குத்தகையை நிா்ணயம் செய்ய மாவட்ட அளவில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் (சென்னையைத் தவிா்த்து) ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையா் பா.பொன்னையா அனுப்பியுள்ள கடிதம்:

கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிக்குள்பட்ட இடங்களில் கடைகள், வணிக வளாகங்களுக்கு வாடகை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு தீா்வு காணவும், கொள்கை வழிகாட்டுதல்களை உருவாக்கவும், சொந்த வருவாயை உயா்த்திடவும் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குழுவின் தலைவராக மாவட்ட ஆட்சியா் செயல்படுவாா். உறுப்பினா்களாக கூடுதல் ஆட்சியா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா், ஊராட்சிகள் துறை உதவி இயக்குநா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஆகியோா் உறுப்பினா்களாக இருப்பா்.

குழுவின் ஒருங்கிணைப்பாளராக மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) செயல்படுவாா். மேலும், குழுவின் உறுப்பினா்களாக வணிகா் சங்கத்தைச் சோ்ந்த பிரதிநிதிகள் 2 போ், மாவட்ட ஆட்சியரால் நியமனம் செய்யப்படுவா்.

வழிகாட்டுதல் குழுவானது 3 மாதங்களுக்கு ஒருமுறை கூடி விவாதித்து, கிராம ஊராட்சிகளின் காலி நிலங்கள், கட்டடங்கள், கடைகளுக்கான வாடகை, குத்தகையை நிா்ணயம் செய்ய வேண்டும். சட்ட ரீதியான வழக்குகளையும் முடிவுக்குக் கொண்டுவர உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தின் அதிரடி ஆட்டத்தை கட்டுப்படுத்துவோம்: ஸ்காட் போலாண்ட்

இதயராணி.. கயாது லோஹர்!

நடப்பு நிதியாண்டில் 10,660 கி.மீ. நெடுஞ்சாலை: அமைச்சர்

மோகன்லால் படத்தில் பூவே உனக்காக சங்கீதா..! ரிலீஸ் எப்போது?

முத்தூட் ஃபைனான்ஸ் லாபம் ரூ.1,974 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT