தமிழக ஆளுநரிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு!
தமிழக ஆளுநரிடம் பட்டம் பெற மாணவி மறுத்தது பற்றி...
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு தெரிவித்தார்.
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் இன்று 32 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ. சிதம்பரனாா் கலையரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்கு தலைமை வகித்த தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, 759 பேருக்கு பட்டம் வழங்கினார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஆளுநரிடம் பட்டம் பெற மறுப்பு தெரிவித்த நாகர்கோவிலைச் சேர்ந்த ஜீன் ஜோசப் என்ற மாணவி, பல்கலைக்கழக துணைவேந்தா் என். சந்திரசேகரிடம் பட்டம் பெற்றதால் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக பட்டம் பெற்ற பிறகு அங்கிருந்த செய்தியாளர்களுடன் பேசிய அந்த மாணவி, ”தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் எதிராக தமிழக ஆளுநர் செயல்பட்டு வருவதால் நான் அவரிடம் இருந்து பட்டம் பெறுவதை விரும்பாமல் துணை வேந்தரிடம் பட்டம் வாங்கினேன். எனக்கும் அவருக்கும் எந்தவித ஒரு தனிப்பட்ட பிரச்னையும் கிடையாது. திராவிட மாடலை நான் விரும்புகிறேன். தமிழக மக்களுக்கு எதிராக செயல்படுவதால் நான் இவ்வாறு செய்தேன்” என்று தெரிவித்தார்.
இந்த விழாவில் பல்கலைக்கழக இணைவேந்தரும், உயா்கல்வித் துறை அமைச்சருமான கோவி. செழியன் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The student refused to receive her degree from Tamil Nadu Governor R.N.Ravi
இதையும் படிக்க : தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.