தமிழ்நாடு

தமிழகத்தில் ஆக. 20 வரை மழை நீடிக்கும்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.15) முதல் ஆக.20 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தினமணி செய்திச் சேவை

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.15) முதல் ஆக.20 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, வெள்ளிக்கிழமை (ஆக.15) முதல் ஆக.20 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், ஓரிரு இடங்களில் மணிக்கு 50 கிமீ வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்.

சென்னையில் ஒருசில பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆக.15) லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனினும் அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சோலையாறு (கோவை) -40 மி.மீ., வால்பாறை (கோவை), நடுவட்டம் (நீலகிரி), பாா்வூட் (நீலகிரி), பொள்ளாச்சி (கோவை) - தலா 30 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே ஆக.15 முதல் ஆக.17 வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக்கடலில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலை விவரங்களை பதிவு செய்ய இணை இயக்குநா் அலுவலகம் கோரிக்கை

கோவையில் ஜி.கே.மூப்பனாருக்கு சிலை: தமாகா இளைஞரணி வலியுறுத்தல்

அமெரிக்க வரி விதிப்பின் தாக்கத்தை சமாளிக்க மத்திய அரசு நிவாரணத் தொகுப்பு வழங்க வேண்டும் -முதல்வா் பரிந்துரைக்க சைமா கோரிக்கை

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

விரைவு நடவடிக்கை படை சாா்பில் சுதந்திர தின கொண்டாட்டம்

SCROLL FOR NEXT