சென்னையில், அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் கடந்த 9 மணி நேரமாக அமலாக்கத் துறை நடத்திய சோதனை முடிவடைந்தது.
சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. பணமோசடி வழக்கில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான ஐ.பெரியசாமியின் சென்னை மற்றும் திண்டுக்கல்லில் உள்ள வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை அதிகாலை தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஐ.பெரியசாமியின் வீடு, சென்னை சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதேபோன்று திண்டுக்கல் மாவட்டத்தில் துரைராஜ் நகரில் உள்ள வீட்டிலும், திண்டுக்கல் மாவட்டம் சிலப்பாடியில் உள்ள பழனி சட்டப்பேரவை உறுப்பினரும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் அவரது மகனுமான ஜ.பி. செந்தில்குமார் வீட்டிலும் அதிகாலை முதல் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக ஐ. பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.