வலையில் சிக்கிய 150 கிலோ எடையிலான ஆமையை மீனவர் பாதுகாப்பாக மீண்டும் கடலில் விட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே மனோரா கடல் பகுதியில் மீன் பிடிக்க வலையை வீசி மீனவர் கல்யாணகுமார் இன்று காத்திருந்தார்.
அப்போது வலையில் 150 கிலோ எடையிலான ராட்சத ஆமை சிக்கியது.
இதையடுத்து வன அலுவலர்களின் அறிவுரைப்படி மீனவர் அதனை பாதுகாப்பாக மீண்டும் கடலில் விட்டார். இச்செயலால் மீனவரை பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகரன் வெகுவாக பாராட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.