தமிழக குழந்தைகளுக்கு நான்தான் தாய்மாமன் என்று தவெக மாநாட்டில் அந்தக் கட்சியின் தலைவர் விஜய் பேசியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரை பாரப்பத்தியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. தவெக தலைவர் விஜய் சுமார் 35 நிமிடங்கள் பேசினார்.
இதனிடையே, ஆரவாரத்துக்கு மத்தியில் தொண்டர்களை நோக்கி இருகரம் கூப்பி விஜய் வணக்கம் செலுத்தி, பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த நடைமேடையில்(ராம்ப்) மாநாட்டு மேடைக்கு வருகை தந்தார். அவர் வரும்போது, விஜய்யின் குரலில் தவெகவின் கொள்கைப் பாடல் ஒளிபரப்பு செய்யப்படது.
இதனைத் தொடர்ந்து தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்,
"தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை கிழக்கு வேட்பாளர் விஜய். மதுரை மேற்கு வேட்பாளர் விஜய். மதுரை வடக்கு வேட்பாளர் விஜய். மேலூர் விஜய், திருப்பரங்குன்றம் விஜய், சோழவந்தான் விஜய்.
அனைத்து தொகுதிகளிலும் விஜய் என்று பார்க்கிறீர்களா!, ஆம் 234 தொகுதிகளிலும் உங்கள் விஜய்தான். உங்கள் வீட்டில் இருக்கும் ஒருவர்தான் வேட்பாளர். இந்த முகத்துக்காக நீங்கள் போடும் ஓட்டு உங்கள் வீட்டில் இருக்கும் உங்கள் வேட்பாளர் வெற்றிப்பெற்றது போன்றதாகும்.
தூத்துக்குடி ஸ்னோலின் அம்மா, என்னை அவர்களின் தம்பி என்றும், அவர்களின் பெண்ணுக்கு நான் தாய் மாமன் என்றும் சொன்னார்கள். அந்த அக்காவுடைய குழந்தைக்கு மட்டுமல்ல, என்னை சகோதரராக நினைக்கும் அனைவருக்கும் நான் தாய்மாமனாக இருப்பேன்.
நீங்கள் எல்லாம் என்னுடைய ரத்த உறவு, உடன் பிறந்த பிறப்பு. உங்கள் ரேஷன் கார்டில் வேண்டுமானால் என் பெயர் இல்லாமல் இருக்கலாம். என்னுடைய வீட்டு ரேஷன் கார்டில் உங்கள் பெயர் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாம் எல்லாம் ஒன்றுதான், உறவுதான்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.