மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் இணைந்தார்.
திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் குமரி மண்டல பூத் முகவர்கள் மாநாட்டு மேடையில் அமித் ஷாவுக்குப் பொன்னாடை அணிவித்துக் கட்சியில் அவர் இணைந்தார்.
திமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக இருந்தவர் கே.எஸ். ராதாகிருஷ்ணன். திமுக தலைவர் மு. கருணாநிதி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், மதிமுக பொதுச்செயலர் வைகோ போன்றோருடன் நெருக்கமாக இருந்தவர் கே.எஸ். ராதாகிருஷ்ணன்.
திருநெல்வேலி, தச்சநல்லூா் அருகே நடைபெற்ற இந்த மாநாட்டில் நிறைவாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உரையாற்றினார்.
இந்த மாநாட்டில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகா் மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய 28 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த பூத் கமிட்டிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் 7 இடங்களில் பாஜக பூத் கமிட்டி மாநாடு நடைபெறுகிறது. இதன்படி, முதல் மாநாடு திருநெல்வேலியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.