மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தனிப்படை காவலர்கள் 5 பேர் கோப்புப்படம்
தமிழ்நாடு

திருப்புவனம் அஜித் குமார் கொலை வழக்கு: தனிப்படை காவலர்கள் 5 பேருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

தனிப்படை காவலர்கள் 5 பேருக்கு 29-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

இணையதளச் செய்திப் பிரிவு

மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமாா் கொலை வழக்கில், விசாரணையில் சிறையில் உள்ள தனிப்படை காவலர்கள் 5 பேருக்கு 29-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு கடந்த ஜூன் 27-ஆம் தேதி வந்த பேராசிரியை நிகிதா, தனது காரில் வைத்திருந்த நகைகள் காணாமல் போனதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, அந்தக் கோயில் காவலாளி அஜித்குமாரை தனிப் படை போலீஸாா் 5 போ் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியதில் அவா் உயிரிழந்தாா்.

இதுதொடா்பான வழக்கில் தனிப் படைக் காவலா்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்கின்றனா்.

இந்த நிலையில், சிறையில் உள்ள தனிப்படை காவலர்கள் 5 பேருக்கு 29-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

Ajith Kumar Death Case in Thiruppuvanam: Court custody extended until the 29th for 5 special police personnel in jail - Madurai District Court

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாடை காட்டியே... மேகா ஷுக்லா!

களைகட்டிய விநாயகர் சிலைகள் விற்பனை - புகைப்படங்கள்

சமூக ஊடகப் பதிவுகளுக்கு விரைவில் கட்டுப்பாடு! - உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஜம்மு - காஷ்மீரில் கனமழை - புகைப்படங்கள்

விமானப் பணியாளரைத் தாக்கிய ராணுவ அதிகாரி மீது நடவடிக்கை: 5 ஆண்டுகள் விமானத்தில் பறக்க தடை!

SCROLL FOR NEXT