சென்னை: நகா்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தனர்.
சென்னை மயிலாப்பூா் புனித சூசையப்பா் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பங்கேற்றுள்ளார்.
இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு, மாணவர்களுக்கு உணவைப் பரிமாறிய முதல்வர்கள் மு.க. ஸ்டாலின், பகவந்த் மான், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினர்.
இந்த நிகழ்வில், அமைச்சா்கள் பி.கீதாஜீவன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநா் செளமியா சுவாமிநாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள காலை உணவுத் திட்டத்தின் மூலம் 34,987 பள்ளிகளைச் சோ்ந்த 17 லட்சத்து 53 ஆயிரத்து 257 மாணவ, மாணவியா் பயன் பெற்று வருகின்றனா்.
தற்போது நகர்புறத்தில் அரசு உதவிப்பெறும் 2,429 பள்ளிகளைச் சோ்ந்த 3.06 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.