கோவையில் 2,000 கிலோ வெடி மருந்துடன் வேன் பிடிபட்டது 
தமிழ்நாடு

கோவையில் 2,000 கிலோ வெடி மருந்துடன் வேன் பிடிபட்டது!

கோவையில் 2,000 கிலோ வெடி மருந்துடன் வேன் பிடிபட்டது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

கோவை: கோவை அருகே 2 ஆயிரம் கிலோ ஜெலட்டின் வெடி மருந்து கடத்திச் சென்ற வேனை பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை காலை பிடித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் பயங்கரவாத செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து கைது செய்யவும், தமிழக அரசு சார்பில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவையில் இருந்து வேன் மூலம் கேரளத்துக்கு ஜெலட்டின் வெடிபொருள் கடத்தப்படுவதாக இன்று அதிகாலை பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறைக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜெலட்டின் கடத்திச் செல்லும் வேனைப் பிடிக்க அதிரடி நடவடிக்கையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினர் இறங்கினர். இன்று அதிகாலை 4 மணியளவில் கேரளத்தை நோக்கிச் சென்ற வேனை மதுக்கரை அருகே பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

வேனில் சோதனை செய்ததில் ஜெலட்டின் குச்சிகள் பெட்டி பெட்டியாக இருந்ததை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இவற்றின் மொத்த எடை 2 ஆயிரம் கிலோ இருக்கும் என முதல்கட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக ஜெலட்டின் வெடி மருந்து குச்சிகள் கடத்தப்பட்ட வேனை மதுக்கரை காவல் நிலையத்துக்கு பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கொண்டு சென்றனர்.

வேனை ஒட்டிச் சென்ற ஓட்டுநர் சுபேரையும் கைது செய்து மதுக்கரை காவல்துறையினர் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேரளத்தில் உள்ள கல்குவாரிக்கு மலைகளை உடைக்க பயன்படுத்துவதற்காக ஜெலட்டின் வெடி மருந்து குச்சிகள் கொண்டு செல்லப்பட்டதாக ஓட்டுநர் சுபேர் தெரிவித்துள்ளார்.

இதற்கு உரிமம் உள்ளதா?, 2 ஆயிரம் கிலோ வெடி மருந்து ஜெலட்டின் குச்சி கொண்டு செல்ல உரிய ஆவணங்கள் வைத்து உள்ளார்களா? என்று விசாரணை நடைபெறுகிறது.

மேலும் அதன் உரிமையாளர் குறித்தும் விசாரணை நடக்கிறது. இன்று அதிகாலை நடந்த இந்த சம்பவம் மதுக்கரை அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.

Van seized with 2,000 kg of explosives in Coimbatore

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குரிமைப் பேரணி: ராகுலுடன் இணைந்த பிரியங்கா, ரேவந்த் ரெட்டி!

பாகிஸ்தானில் கடும் வெள்ள அபாய எச்சரிக்கை! 24,000 பேர் வெளியேற்றம்!

'வருந்தச் செய்யும்' ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு! யாருக்குத்தான் டிக்கெட் கிடைக்கிறது?

கடவுளை முட்டாளாக்க முடியாது! ரவி மோகனைச் சாடும் ஆர்த்தி?

ஈரானுடன் உறவை முறித்த ஆஸ்திரேலியா! தூதர் வெளியேற உத்தரவு!

SCROLL FOR NEXT