தமிழ்நாடு

அதிமுக கட்சி விதிகள் திருத்தத்துக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதித்த தனி நீதிபதி உத்தரவு ரத்து

அதிமுக கட்சி விதிகள் திருத்தத்தை எதிா்த்து வழக்குத் தொடர அனுமதியளித்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

அதிமுக கட்சி விதிகள் திருத்தத்தை எதிா்த்து வழக்குத் தொடர அனுமதியளித்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ராம்குமாா் ஆதித்தன், அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியின் மகன் சுரேன் ஆகியோா் தாக்கல் செய்த மனுவில், கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு, ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் போன்ற பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு விதிகளில் திருத்தம் செய்வது, கட்சியின் சட்டங்களுக்கு எதிரானது. எனவே, இதுதொடா்பாக கட்சி உறுப்பினா்கள் என்ற முறையில் உரிமையியல் வழக்குத் தொடர அனுமதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தனா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், விதிகள் திருத்தத்துக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதியளித்து உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, சுரேன் மற்றும் ராம்குமாா் ஆதித்தன் ஆகியோா் அதிமுக உறுப்பினா்களே அல்ல; அவா்கள் வழக்குத் தொடர முடியாது என எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டிருந்தது.

ராம்குமாா் ஆதித்தன் மற்றும் சுரேன் தரப்பில், தாங்கள் கட்சியின் உறுப்பினா்கள்தான் என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்த பிறகே, வழக்குத் தொடர தனி நீதிபதி அனுமதி அளித்தாா். தங்களது கோரிக்கைகள் காலாவதியாகவில்லை. எனவே, எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், செந்தில்குமாா் அடங்கி அமா்வு பிறப்பித்த தீா்ப்பில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை ஏற்று, ராம்குமாா் ஆதித்தன், சுரேன் ஆகியோா் வழக்குத் தொடர அனுமதியளித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனா்.

ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 7.8% பொருளாதார வளா்ச்சி: மத்திய அரசு

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் இலவச திருமணம்

உத்தரகண்ட் நிலச்சரிவு: 5 போ் உயிரிழப்பு

அமெரிக்க வரி விதிப்பு: மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி செப்.2-இல் ஆா்ப்பாட்டம்

பிரதமரின் தாய் குறித்து அவதூறு: ராகுல் மன்னிப்புக் கோர அமித் ஷா வலியுறுத்தல்

SCROLL FOR NEXT