1,300 ஆண்டுகள் பழமையான ஆதிகும்பேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் மாநகரில் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகப்பெருவிழா உலக பிரசித்தி பெற்றது.
அந்த மகாமகப் பெருவிழா தொடர்புடைய 12 சைவ திருத்தலங்களில் முதன்மையான தலமாக விளங்குவதும் 1,300 ஆண்டுகள் பழமையானது தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் சோழநாடு காவிரி தென்கரை தளங்களில் அமைத்துள்ள 26ஆவது சிவத்தலமாகும் கல் நாதஸ்வரம் உள்ள பெருமையை பெற்றுள்ள மங்களாம்பிகா சமேத ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் ஆகும்.
இக்கோயிலில் கடந்த 2009 ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பக்தர்களின் கோரிக்கையை ஏற்று 15 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2024 ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு பல்வேறு கட்டங்களாக கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நிறைவு பெற்றன.
அதனைத்தொடர்ந்து 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 99 குண்டங்கள் கூடிய யாகசாலைகள் அமைக்கப்பட்டு, கடந்த 28 ஆம் ஆண்டு விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
இன்று காலை எட்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று கடம் புறப்பாடு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழுங்க கோபுர கலசங்களுக்கு மகா குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.