ஸ்ரீ மஹா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளானோர் பங்கேற்பு!
கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் திரண்டதைப் பற்றி..
Sri Maha Kaliamman Temple Kumbabhishekam. A large number of devotees participated and had darshan of the deity.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா சந்தானபுரம் கிராமத்தில் ஸ்ரீ மஹா காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் கும்பாபிஷேக திருப்பணிகள் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று முடிவுற்ற நிலையில், கடந்த 10 ஆம் தேதி கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பூர்வாங்க பூஜைகளுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
இன்று காலை நான்காம் கால பூஜைகள் நிறைவு பெற்று மேள, தாளங்களுடன் வேத மந்திரங்கள் முழங்க, கடம் புறப்பாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீ மஹா காளியம்மன் கோபுர கலசத்திற்குப் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்று, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சந்தானபுரம் கிராமத்தினர், நாட்டாண்மை மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
Sri Maha Kaliamman Temple Kumbabhishekam. A large number of devotees participated and had darshan of the deity.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.