ஆடி வெள்ளி: வடபத்ர காளியம்மன் கோயிலில் திரளானோர் வழிபாடு!
ஆடி வெள்ளியை முன்னிட்டு வடபத்ர காளியம்மன் கோயிலில் திரளானோர் வழிபாடு மேற்கொண்டது தொடர்பாக..
ஆடி வெள்ளியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற வடபத்ர காளியம்மன் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடி மாதம் பிறந்ததை ஒட்டி பிரசித்தி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயம், பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் ஆலயம், வடபத்ர காளியம்மன் ஆலயத்தில் பக்தர்கள் காலை முதலே குவிந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.
இதேபோல், தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் உள்ள நிசம்பசூதனி என்கிற வட பத்ரகாளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயத்தில் காலை முதல் பக்தர்கள் விளக்கேற்றி நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
அதிக அளவில் பக்தர்கள் வருவதால் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
On the occasion of Aadi Friday, a large number of devotees stood in long queues at the renowned Vadabadra Kaliamman Temple to worship the Goddess.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.