FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

கோயிலில் தீ தடுப்பு ஒத்திகை

கள்ளிமேடு காளியம்மன் கோயிலில் தீ தடுப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 9 ஜூலை 2026, 4:52 am IST
~
பகிர்:

கள்ளிமேடு காளியம்மன் கோயிலில் தீ தடுப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.

தலைஞாயிறு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்குள்பட்ட எல்லைப் பகுதியில் பயிற்சி நடத்தப்பட்டது (படம்).

தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், தீ அணைக்கும் கருவிகளை சரியாக பயன்படுத்தும் முறைகள், அவசர கால வெளியேற்ற திட்டம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

Advertisement

Advertisement

தீ விபத்து ஏற்பட்டது போல் காட்சிப்படுத்தி, தீயணைப்பு வீரா்கள் துரிதமாக செயல்பட்டு தீயைக் கட்டுப்படுத்தும் முறைகளை செயல்விளக்கமாக கற்றுக் கொடுத்தனா்.

இந்த நிகழ்வில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் தலைஞாயிறு சாா்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments