FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு உற்சவம் கொடியேற்றம் பற்றி..

Updated On : 16 ஜூலை 2026, 4:08 pm IST
ஆடி முளைக்கொட்டு திருவிழா - video crop
பகிர்:

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆடிப்பட்டம் தேடி விதை என்ற ஆன்றோர் வாக்கின்படி விவசாயிகள் ஆடி மாதம் விதை விதைத்து நாற்று நட்டு விவசாயப் பணிகளை மேற்கொள்ளவும், தங்கள் நிலங்களில் பயிர்கள் அமோக விளைச்சல் வேண்டியும் முளைக்கட்டு வைத்து இறைவனை வழிபாடு செய்வர். அந்த வகையில் மீனாட்சி அம்மன் கோயிலில் அம்மனுக்கு மட்டும் உரிய திருவிழாக்கள் ஆடி முளைக்கொட்டு திருவிழா, ஐப்பசி கோலாட்ட உற்சவம், நவராத்திரி கலை விழா, மார்கழி எண்ணெய்க் காப்பு ஆகியவை சிறப்பு கொண்ட விழாக்கள் ஆகும்.

அந்த வகையில் சிறப்புப் பெற்ற ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றம் இன்று அம்மன் சன்னதி முன்பு நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட அம்மன் சன்னதியில் முன்புள்ள கொடி மரம் முன்பு மீனாட்சி அம்மன் பல்லக்கில் எழுந்தருளியதைத் தொடர்ந்து சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதனையடுத்து வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்கிட கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. கொடியேற்ற விழாவில் மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கொடியேற்றத் தரிசனம் செய்தனர்.

Advertisement

Advertisement

விழா நடைபெறும் 10 நாள்களும், தினமும் காலையிலும், மாலையிலும் மீனாட்சி அம்மன் பஞ்சமூர்த்திகளுடன் கோயில் வளாகத்தில் ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அப்போது சிறப்பு நாதஸ்வரம் மற்றும் தவில் வித்வான்களின் வரவேற்பு நடைபெறும். அதனைத் தொடர்ந்து கொட்டு மேளம் எனும் சிறப்பு இன்னிசை மீட்டி அம்மன் இருப்பிடம் சேர்த்தியாவார்.

விழாவில் வரும் 22-ம் தேதியன்று மாலையில் அம்மன் ஆடி வீதி உலா நிறைவடைந்ததும், உற்சவர் சன்னதியில் மாலை மாற்றும் பூஜைகள் நடைபெறுகிறது. ஆடி முளைக்கொட்டு உற்சவத்தின் மூலம் விவசாயம் செழிக்கும் என பக்தர்கள் நம்புவதால், அதனடிப்படையில் பூஜைகள் அனைத்தும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

The Aadi Mulaikottu festival at the Arulmigu Meenakshi Sundareswarar Temple in Madurai began grandly today with the flag-hoisting ceremony. A large number of devotees participated in the festival and offered prayers to the deity.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments