எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவர் அல்ல, அவருக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுடன் பேசுகையில், ”எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவர் அல்ல, அவருக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், என்னைப் பொறுத்தவரை நான் தெளிவாக உள்ளேன். தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பு அளிப்பார்கள்’ என்றார்.
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில் கோபி- சத்தி சாலையில் நல்லகவுண்டன்பாளையம் திருமால் நகரில் ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ பிரசார பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமை வகித்துப் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், “கோபியில் உள்ள ஒருவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன் மனம் திறந்து பேட்டி கொடுத்தார். கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சியில் இருந்து நீக்கப்பட்டவரை சந்தித்தார். தலைமைக்கு எதிராக பேட்டி கொடுத்ததால் கட்சிப் பொறுப்பில் இருந்து விடுவித்தோம்.
அதன்பின், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் விழாவுக்கு கட்சியில் இருந்து நீக்கப்பட்டவருடன் சென்றார். அதனால் அவர் அடிப்படை உறுப்பினர் என்பதிலும் இருந்து நீக்கப்பட்டார். கட்சிக்கு துரோகம் செய்ததால்தான் அவர் நீக்கப்பட்டார்” என்றார்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி வைத்த விமர்சனத்துக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.
இதையும் படிக்க: டிட்வா புயல்: நிவாரண நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆய்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.