வங்கக்கடலில் நிலவிய டித்வா புயல் வலுவிழந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய வட மாவட்டங்களில் கனமழைப்பொழிவை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஏரியில் இருந்து உபரிநீா் திறந்து விடப்பட்டுள்ளது. கரையோர பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனா். புழல் ஏரிக்கு நீர் வரத்து விநாடிக்கு 2,200 கன அடியில் இருந்து 4,167 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சோழவரம் ஏரிக்கு நீர் வரத்து விநாடிக்கு 289 கன அடியில் இருந்து 1,605 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பூண்டி ஏரிக்கு நீர் வரத்து விநாடிக்கு 2,100 கன அடியில் இருந்து 2,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 400 கன அடியில் இருந்து 1,444 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.