கோப்புப் படம் 
தமிழ்நாடு

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 12 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு (இரவு 7 மணி வரை) சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | புதுச்சேரியில் விஜய் சாலைவலம் செல்ல அனுமதி மறுப்பு!

Rain chance for 13 districts of tamilnadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கிப் பங்குகள் சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

கருப்புப் பணமா? அப்படி ஒன்று இல்லவே இல்லையே!

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம்! மேல்முறையீடு செய்ய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கோரிக்கை

அயர்லாந்தை வீழ்த்தி டி20 தொடரை வென்ற வங்கதேசம்!

டிட்வா புயலால் இலங்கையில் 3 லட்சம் குழந்தைகள் பாதிப்பு..!

SCROLL FOR NEXT