சநாதன தர்மத்துக்கு எதிராக திமுக அரசு செயல்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக அண்ணாமலை ``சநாதன தர்மத்தின் மீது திமுக அரசின் விரோதப் போக்கை இனி விவரிக்கத் தேவையில்லை. நீதிமன்ற உத்தரவை எதிர்த்து இந்து சமய மற்றும் அறக்கட்டளைத் துறை மேல்முறையீடு செய்துள்ளது. அரசின் இந்தச் செயல், மக்களின் நம்பிக்கையை உடைக்கிறது.
இன்று, நூற்றுக்கணக்கான காவல்துறையினரால் பக்தர்களின் மதச் சடங்குகளைத் தடுத்தன் மூலம், திமுக ஆட்சியின் அரசியலை வெளிப்படுத்தியுள்ளது.
சநாதன தர்மம் ஏன் மறுக்கப்படுகிறது என்பதற்கு திமுக விளக்கமளிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுக்கு அரசின் பதில் என்ன?’’ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: திருப்பரங்குன்றம் மலைப் பாதையில் சூடமேற்றி கலைந்து சென்ற இந்து அமைப்பினர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.