திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலை மீது மகா தீபம் இன்று (டிச., 3) ஏற்றப்பட்டது. பக்தர்கள் வெள்ளத்தில் அரோகரா கோஷம் முழங்க மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
கார்த்திகை தீபத்தையொட்டி அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.
ஆண்டுக்கு ஒரு முறை சில நிமிடங்கள் மட்டுமே காட்சி தரும் அா்த்தநாரீஸ்வரா், ஆனந்த தாண்டவம் ஆடியபடி மூன்றாம் பிரகாரத்தில் பக்தா்களுக்கு காட்சி அளித்ததைத் தொடர்ந்து 2668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுக்க உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் தீபம் ஏற்றப்பட்டது.
கொப்பரையில் 4,500 கிலோ நெய் மற்றும் 1,150 மீட்டர் காடா துணி கொண்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. பருவத ராஜகுல மக்கள் 48 நாள்கள் விரதம் இருந்து மலையின் உச்சியில் தீபத்தை ஏற்றினர். மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து வீடுகளில் தீபம் ஏற்றி மக்கள் வழிபட்டனர்.
சுற்றுப்புறத்திலுள்ள மக்கள் வழிபடுவதற்காக தொடர்ந்து 11 நாள்களுக்கு மகா தீபம் எரியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தொடர் மழை: விம்கோ நகர் வாகன நிறுத்துமிடம் மூடல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.