கோப்புப் படம் 
தமிழ்நாடு

இரவில் சென்னை, 16 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணிநேரத்துக்கு (இரவு 10 மணி வரை) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும், அரியலூர், கடலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, பெரம்பலூர், ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, திருச்சி, நெல்லை, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | சென்னையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

Weather update rain for 17 districts of tamilnadu include chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று 4, நாளை 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

டி20 உலகக் கோப்பைக்கு அனிருத் இசையில் புதிய பாடல்!

ஸ்டீவ் ஸ்மித் 2.0..! டி20 உலகக் கோப்பையில் இடம்பெறாதது ஏன்?

பாகிஸ்தானில் பனிச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலி!

நாங்கள்தான் மீண்டும் மீண்டும் வருவோம்! மீண்டும் வெல்வோம்!! - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

SCROLL FOR NEXT