மழையில்... 
தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை?

அடுத்த 3 மணி நேரத்துக்கு (மதியம் 1 மணி வரை) 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

அடுத்த 3 மணி நேரத்துக்கு (மதியம் 1 மணி வரை) 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (வலுவிழந்த டிட்வா) இன்று(டிச.3) காலை 5.30 மணியளவில் மேலும் வலுவிழந்தது.

மேலும், வட தமிழ்நாடு புதுச்சேரி கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது.

இதனால், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் தலைநகர் சென்னையை ஒட்டிய திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வாளார் பிரதீப் ஜான் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கோயம்புத்தூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத்” தெரிவித்துள்ளது.

Which districts will experience heavy rain in the next 3 hours?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டிற்குள் புகுந்த மழைநீர்! சிக்கியவர்களை மீட்ட தீயணைப்புத்துறையினர்!

நிதி ஒதுக்கீடு செய்தும் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படவில்லை: விஜய்

செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் திறப்பு அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

பேச்சுவார்த்தைக்குகூட யாரும் இருக்க மாட்டீர்கள்! ஐரோப்பிய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை!

சிவப்பு கம்பள வரவேற்பில் தேநீர் குவளையுடன் பிரதமர் மோடி.. காங்கிரஸ் பகிர்ந்த ஏஐ விடியோவால் சர்ச்சை!

SCROLL FOR NEXT