தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும் முதுபெரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன் (வயது 86) வியாழக்கிழமை காலை காலமானார்.
சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவின் மூன்றாவது தளத்தில் அஞ்சலிக்காக சரவணனின் உடல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று காலை நேரில் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சரவணின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இதேபோல், நடிகர்கள் ரஜினிகாந்த், சிவக்குமார், சூர்யா உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.